கடலுார் : கடலுாரில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடந்தனதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபாலசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். புதுப்பாளையம் செங்கமலத்தாயார் சமேத ராஜகோபாலசாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராய் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பாதிரிபுலியூர் ருக்மணி சத்யபாமா சமேத கண்ணபிரான் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில், கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தன. மாலை ருக்மணி சத்யபாமா மற்றும் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று (31ம் தேதி) மாலை சுவாமிக்கு திருக்கல்யாணமும், 1ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நேற்று மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5:00 மணிக்கு உறியடி திருவிழா நடந்தது. நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில், சி.என்.பாளையம் வரதராஜபெருமாள் ஆகிய கோவில்களில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.சிதம்பரம்: மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பில் நடந்த விழாவிற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்டத் தலைவர் ஜெய முரளி கோபிநாத் தலைமை தாங்கினார். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், மாவட்ட பொருளாளர் முத்துக்குமரன, பா.ஜ.,மாநில செயற்குழு உறுப்பினர் ராஜரத்தினம், முன்னாள் மாவட்டத் தலைவர் தாமரை மணிகண்டன், வெங்கடேச தீட்சிதர், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில பொறுப்பாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.