பதிவு செய்த நாள்
31
ஆக
2021
01:08
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம் நடந்தது.
விழாவையொட்டி, கிருஷ்ணசாமி கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அருள்மிகு கிருஷ்ணசுவாமி, பாமா, ருக்மணி தாயார்களுடன், சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு, அருள்பாலித்தார். பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஆனால், தொற்று பரவல் காரணமாக, இந்தாண்டு எவ்வித சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை.