பதிவு செய்த நாள்
01
செப்
2021
10:09
உடுப்பி: கிருஷ்ணர் ஜெயந்தியை ஒட்டி, உடுப்பி கிருஷ்ணர் மடத்தின் ராஜ வீதியில், இரட்டை ரதங்கள் உலா வந்தன. கிருஷ்ண ஜெயந்தியைஒட்டி, உடுப்பி கிருஷ்ண மடத்தில், மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள், அபிேஷகங்கள் நடந்தன.
உடுப்பியின் எட்டு மடங்களின் மடாதிபதிகள் பங்கேற்று சுவாமியை ஆராதனை செய்தனர். விட்டல பிண்டி உற்சவம் நடந்தது. இறுதி நாளான நேற்று, அத மாருமடத்தின் மடாதிபதி ஈச பிரய தீர்த்த சுவாமிகள், மண்ணால் ஆன கிருஷ்ணர் சிலையை, தங்கரதத்தில் பிரதிஷ்டை செய்தார். இது போன்று, கனக நவரத்னரதத்தில், அனந்தேஸ்வரா, சந்திரமவுலேஸ்வரா உற்சவ மூர்த்திகளை வைத்து பூஜை செய்து ரத உற்சவத்தை துவக்கி வைத்தார். கொரோனாவால் குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ராஜ வீதியில் இரட்டை ரதங்கள் வருவதை பார்த்த பக்தர்கள் கரகோஷம் எழுப்பி வழிபட்டனர். ராஜ வீதியில் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த, 14 தயிர் மண் பாண்டங்கைள, வெவ்வேறு வேட மணிந்தவர்கள் உடைத்து கொண்டாடினர். இறுதியாக, மத்வசேராவரகுளத்தில், மண்ணால் ஆன கிருஷ்ணர் சிலை கைரக்கப்பட்டது.