கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 16 வீடுகள் இடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2021 11:09
தஞ்சாவூர்:கும்பகோணத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 16 வீடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணத்தில், நாகேஸ்வரன் கோவிலின்இணைக் கோவிலாக நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது.அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளாக சிலர் கூரை, ஓட்டு வீடுகளை கட்டி வசித்து வந்தனர்.அங்கிருந்த 16 வீடுகளை அகற்ற, வீட்டின் உரிமையாளர்களுக்கு, 2016ம் ஆண்டு அறநிலையத் துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இதை ஏற்று 12 பேர் வீடுகளை காலி செய்தனர். நான்கு பேர் மட்டும் அங்கிருந்து வெளியேறாமல் இருந்தனர்.அந்த நான்கு பேருக்கும், சில வாரங்களுக்கு முன் மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் காலி செய்யவில்லை. இந்நிலையில் நேற்று காலை, அந்த நான்கு வீடுகளுடன் சேர்த்து, 16 வீடுகளும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டு, 20 ஆயிரத்து 752 சதுர அடி கோவில் இடம் மீட்கப்பட்டது.