தீர்த்தங்கள் திறக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2021 03:09
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில்தீர்த்தங்களை திறக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் அக்னி தீர்த்த கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மார்ச் 23ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் மூடியதால், கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது. தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், தங்கும் விடுதி, ஓட்டல் உரிமையாளர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 மாதம் மூடிக்கிடக்கும் தீர்த்தங்களை திறக்க கோரி கோயில் அக்னி தீர்த்த கடலில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் காசிநாததுரை, தாலுகா செயலாளர் சிவா, நிர்வாகிகள் கருணாகரன், ஜஸ்டின், கருணாமூர்த்தி, அசோக் பலர் கலந்து கொண்டனர்.