தாழியில் இருந்த கிண்ணங்கள் ஆய்விற்கு அனுப்ப முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2021 03:09
திருப்புவனம் : கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகளில் இருந்த சுடுமண் கிண்ணங்களை ஆய்விற்கு அனுப்ப தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.கீழடி ஏழாம்கட்ட அகழாய்வில் அகரம், கொந்தகை, கீழடி ஆகிய மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இம்மாத கடைசியில் பணிகள்நிறைவடைய உள்ள நிலையில் கொந்தகை தளத்தில் 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் 14 தாழிகளில் உள்ள சுடுமண் கிண்ணங்கள், எலும்புகள், பானை,குடுவைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.தாழிகளில் இரண்டு முதல் நான்கு சுடுமண் கிண்ணங்கள் வரை வெவ்வேறு வடிவங்களில்கிடைத்துள்ளன.
இதில் பெரும்பாலான கிண்ணங்களில் உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.பண்டைய காலமக்கள் பயன்படுத்தியஉணவு வகைகள் குறித்த ஆய்விற்காக கிண்ணங்கள், மண்டை ஓடுகளில் உள்ள பற்கள் மரபணு பரிசோதனைக்காக அனுப்ப தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர். கிண்ணங்களில் உட்பகுதியைசுரண்டி அதில் உள்ள செல்களை ஆய்வு செய்யும் போது என்ன வகையான உணவை பயன்படுத்தியுள்ளனர் என அறியலாம். அதன்படிஉணவு, தண்ணீர் கிண்ணங்களை தனித்தனியாக வகைப்படுத்தலாம் என தொல்லியல் துறையினர் மதுரை காமராசர் பல்கலை கழகத்திற்கும், அமெரிக்காவில் உள்ளஆய்வகத்திற்கும் அனுப்ப ஏற்பாடு செய்து வருகின்றனர்.