திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2021 04:09
கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளை விநாயகர் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவலஞ்சுழி திருத்தலத்தில் தந்தையின் நிழலில் அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார் விநாயகர் . கபர்தீஸ்வரர் எனும் பெயரில் இங்கே ஈசன் இருக்க, அவருக்கு முன்புறமாக பெரிய பிராகாரத்தினுள் தனிக்கோயில் கொண்டு, தந்தையை முந்திக் கொண்டு இந்தத் தனயன் பக்தர்களை எல்லாம் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார். அதனாலேயே இது சிவன் கோயிலாக அறியப்படாமல் விநாயகர் கோயிலாகவே வெளியுலகம் அறிந்திருக்கிறது. அண்டி வரும் அன்பர்களுக்கெல்லாம் இன்பநிலை எய்திட அருள்செய்யும். இந்த விநாயகருக்கு சுவேத (ஸ்வேத) விநாயகர் என்று பெயர். தமிழில் வௌ்ளை வாரணர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவத்தை முன்னிட்டு வெள்ளை விநாயகர் கொடியேற்றம் இன்று நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.