திண்டிவனம்: சனி பிரதேசத்தை யொட்டி பீமேஸ்வரர் கோவிலில், மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் ஆயிரத்தி 14 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீமேஸ்வரர் கோவில் உள்ளது. போரில் பஞ்சபாண்டவர்கள் இழந்த பொருள் மற்றும் ராஜ்யத்தை மீண்டும் பெற பீமன் வந்து ஸ வணங்கியதால் இந்த ஈஸ்வரன் கோவில் பீமேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேற்கு நோக்கி ஆறடி உயர மூலவர் அமைந்துள்ளார். சனி பிரதோஷமான இன்று மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், பழங்கள் உள்பட 11 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவமூர்த்தி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.