பதிவு செய்த நாள்
04
செப்
2021
07:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சனி மஹா பிரதோஷ பூஜை நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை, சனி மஹா பிரதோஷ பூஜை நடந்தது. இதை முன்னிட்டு கோவிலில் உள்ள சிறிய நந்தி, அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மஞ்சள், சந்தனம், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசன திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. கொரோனா ஊரடங்கால், பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை.