சேதுக்கரை: ஆவணி அமாவாசையை முன்னிட்டு செப்.6ல் சேதுக்கரை மன்னார் வளைகுடா கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும்.தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்புல்லாணி பி.டி.ஓ., ராஜேந்திரன் கூறியதாவது; சேதுக்கரை ஊராட்சிக்கு செல்லக்கூடிய வழித்தடங்களில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து கடற்கரைக்கு செல்லும் வழியில் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். கொரோனா மூன்றாம் அலை பரவுதலை தடுக்க சேதுக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கடற்கரைப் பகுதிகளில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.