ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருங்குடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாடு நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பூஜை செய்யப்பட்ட புனிதநீர் சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.