தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே கழனிக்குடி கூடார செல்லியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, நேற்று காலை பால்குட விழா நடைபெற்றது. தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில், புனித நீராடிய பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.