அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.செப்.,2 முதல் கால யாக பூஜை துவங்கி, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று காலை 2ம் கால யாகசாலை, தீபாராதனையை தொடர்ந்து மங்கள இசை, வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நான்கு பாட்டனார் வகையறாவினர் செய்திருந்தனர்.