ஒட்டகத்தின் மீதேறி ஒருவர் மெக்காவிற்கு யாத்திரை சென்றார். வழியில் ஒருவர் சென்று கொண்டிருப்பதை பார்த்தார். அவரிடம் ‘எங்கே செல்கிறாய்’ எனக்கேட்டதற்கு, தான் மெக்கா செல்வதாக தெரிவித்தார். ‘‘ஒட்டகத்தில் செல்வதற்கே எனக்கு சிரமமாக உள்ளதே. நீயோ செருப்பு இல்லாமல் நடக்கிறாயே.. கால்கள் வெந்து போகாதா’’ என கேலி செய்தார். “ஐயா.. எனக்கு எந்தவித கவலையும் இல்லை. தங்களின் விசாரிப்புக்கு நன்றி’’ என நடந்து சென்றவர் சொன்னார். சிறிது துாரம் சென்றதும் ஒட்டகத்தில் இருந்தவர் வெப்பம் தாங்காமல் மரணம் அடைந்தார். நடந்து சென்றவர் இதைப்பார்த்தவுடன் ‘தலையில் கனம் ஏறியதால் இப்படி ஆகிவிட்டார் போல’ என வருத்தப்பட்டார். தலைநிமிர்ந்து வாழ தலைக்கனம் வேண்டாமே.