* பெற்றோரை சந்தோஷப்படுத்து. கடவுள் மகிழ்வார். * பொறாமையை கைவிடு. மகத்தான செயலை செய்யலாம். * நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். * உன்னால் எதையும் சாதிக்க முடியும். * பலமே வாழ்வு. பலவீனமே மரணம். * கீழ்ப்படிய கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக வரும். * உற்சாகமாக இரு. இதுவே வெற்றியின் முதல் அறிகுறி. * ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும். * நீ செய்த தவறுகளை வாழ்த்து. அதுவே உனக்கு வழிகாட்டும் தெய்வமாக இருக்கும். * அன்பின் மூலம் செய்யும் செயல் மகிழ்ச்சி தரும். * உனக்குத் தேவையான வலிமை உனக்குள்ளே உள்ளது. * உலகம் போல உன்னுடைய இதயத்தை பெரிதாக்கு. * பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. * மனவலிமையும், இரக்க குணமும் கொண்டவனே உண்மையான வீரன். * பிறருக்கு உதவு. அது கடவுள் அளித்த வாய்ப்பு. * சாதனை புரியவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார். * உண்மையின் பாதையில் செல். வெற்றி உனக்கே. * நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல. உன் வாழ்க்கை. * உனது பலவீனமே உனக்கு துன்பமாக அமைகிறது. * உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.