* தன் உழைப்பால் கிடைக்கும் உணவே சிறந்தது. * ஏழைகளுக்கு தானம் செய்தால் ஒரு நன்மை கிடைக்கும். * சந்தேகம் கொள்வது மிகப்பெரிய நோய். * மனைவிக்கு ஆசையோடு ஒரு கை அளவாவது உணவு ஊட்டினால் நன்மை கிடைக்கும். * அனாதைகளின் பொருட்களை திருடாதே. * சாப்பிட்டதும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். * அண்டைவீட்டார் பசித்திருக்க நாம் மட்டும் உண்பது தர்மம் ஆகாது. * வயிறு புடைக்க உண்ணாதீர்கள். * அனைவரும் சேர்ந்து உணவு சாப்பிடுங்கள். * உண்ணும் போதும், நீர் அருந்தும் போதும் வலதுகையை பயன்படுத்துங்கள். * சிட்டுக்குருவியின் மீது இரக்கம் காட்டினால், உங்களுக்கு அன்பும், அருளும் கிடைக்கும். * செம்மறி ஆடுகளை அன்புடன் நடத்துங்கள். ஏனெனில் சொர்க்கத்தில் உள்ள பிராணிகளில் ஆடுகளும் உள்ளன. – பொன்மொழிகள்