மன்னர் ஒருவர் தனது படைகளுடன் காட்டிற்கு சென்றார். காட்டை விட்டு வெளியே செல்வதற்கு பாதை தெரியாததால், அங்கு சற்று தெலைவில் தவம் செய்து கொண்டிருந்த துறவியை பார்த்தார். அவரிடம் பாதை கேட்டு வருமாறு வீரனை அனுப்பினார் மன்னர். அவனும் துறவியிடம் கேட்கவே, அவர் கண்ணை திறக்காமல் வழி சொன்னார். ஆச்சர்யப்பட்ட வீரன் நடந்ததை மன்னரிடம் தெரிவித்தான். இதன்பிறகு அமைச்சரை அனுப்பி வழிகேட்கவே, மீண்டும் கண்ணை திறக்காமலே பதில் சொன்னார் துறவி. ‘‘தாங்கள் எப்படி கண்ணை திறக்காமலேயே, பிறர் யார் என்பதை கண்டுபிடித்தீர்கள்’’ எனக்கேட்டார் மன்னர். ‘‘நான் செய்தது சாதனை அல்ல. உங்களை வெளிப்படுத்திக்கொண்ட விதம்தான் உங்களை யார் என்று எனக்கு உணர்த்தியது. காவல் வீரனின் பேச்சில் பணிவு இல்லை. அமைச்சரின் குரலில் அதிகாரத்தொனி இருந்தது. ஆனால் உங்களிடம் மட்டுமே பணிவும், பண்பும் தெரிந்தது’’ என்றார். உங்களின் அணுகுமுறையை வைத்துதான், பிறர் உங்களை மதிப்பிடுவர். பிறரிடம் பேசும்போது எப்படி பேச வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலரும்.