அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் ரயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஒருபெண் பதட்டமாக இருப்பதை கண்டார். ‘‘உதவி வேண்டுமா’’ எனக்கேட்டார். “ரயிலுக்கு நேரமாகி விட்டது. இந்தப் பெட்டியை துாக்கிச் செல்பவர் இன்னும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று சொன்னார். “நானும் உள்ளேதான் வருகிறேன்’’ என்று சொல்லி அந்தப் பெட்டியை துாக்கிச் சென்றார். அவர்கள் இருவரும் செல்லவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. ரயிலை சரியான நேரத்தில் பிடிக்க உதவி லிங்கனுக்கு நன்றி தெரிவித்தார் அந்தப்பெண். இப்படி பெரிய பொறுப்பில் இருந்தும், பிறர் உதவி கேட்டால் உடனே செய்வார் லிங்கன். அவரைப்போல பிறருக்கு உதவி செய்வதில் முந்துங்கள்.