கிரேக்க நாட்டை அலக்ஸாண்டர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் இந்தியா மீது படையெடுப்பதற்கு முன், தியோஜினிஸ் என்னும் ஞானியை சந்திக்க சென்றார். அப்போது ஞானி அமைதியாக உள்ளதை கண்டு திகைத்தார். ‘‘என்னிடம் செல்வம் இருந்தும் நான் பதட்டமாக இருக்கிறேன். ஆனால் நீங்களோ.. எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறீர்களே... இதற்கு என்ன காரணம்’’ என ஞானியிடம் கேட்டார் அலக்ஸாண்டர். ‘‘எனக்கு எந்த ஆசையும் இல்லை. எதுவும் என்னுடையது இல்லை என்று நினைப்பதே என் பலம். நான் என்னை வென்றுவிட்டதால் உலகை வென்றுவிட்டேன்’’ என்று சிரி்த்தார். ஞானியிடமிருந்து இப்படி ஒருபதிலை கேட்ட அலக்ஸாண்டர் ஆச்சர்யப்பட்டார்.