* பெற்றோரிடம் கண்ணியத்துடன் நடப்பது குழந்தைகளின் கடமை. * குழந்தைகளை சமமாக நினைப்பது பெற்றோரின் கடமை. * ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப்பாளர். அதில் வரும் பாவத்தை பிறர் சுமக்க மாட்டர். * எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். * சிறிய செயலாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்யுங்கள். * உங்களிடம் உள்ள செல்வங்களை இறைவன் பார்ப்பதில்லை. மாறாக உங்களின் செயல்களை மட்டுமே பார்க்கிறான். * எவர் மென்மையை இழந்துவிடுகிறாரோ அவர் நன்மைகள் அனைத்தையும் இழந்து விடுகிறார். * தவறு செய்பவர்களை மன்னியுங்கள். * சண்டையில் பிறரை வீழ்த்துபவன் வீரன் அல்ல. கோபத்தை அடக்குபவனே வீரன். * மதுபானம் பரிமாறப்படும் விருந்தில் கலந்து கொள்ளாதீர்கள். * மிருகங்களை ஒருபோதும் சித்திரவதை செய்யாதீர்கள். * இருவருக்கு இடையில் அவர்களின் அனுமதியின்றி அமரக்கூடாது. * சேவலை திட்டாதீர்கள். அது காலையில் உங்களை எழுப்புகிறது. * இறந்தவர் செய்த நன்மைகளை நினையுங்கள். அவர்கள் செய்த தீமையை மறந்து விடுங்கள். * நேர்மையான வழியில் செல்லுங்கள். யாருடைய தீங்கும் உங்களை பாதிக்காது. * சோதனையை பொறுத்துக் கொள்பவர் பாக்கியம் பெற்றவர். * உலகத்தவரின் எண்ணங்கள் பணம் இருக்கும் இடம் நோக்கியே செல்லும். * நீங்கள் செய்த நன்மையை சிந்திப்பதை விட நீங்கள் செய்த பாவங்களை சிந்தியுங்கள். – பொன்மொழிகள்