குளிக்காமல் சமைப்பதே தவறு. இதில் காகத்திற்கு வேறா? சமையற்கட்டு அடுப்பு, அரிசி எல்லாமே தெய்வீகமானவை. திருமணத்திற்குப் பிறகு ஒருவர் வாழ்க்கையில் உயர்ந்தால் பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று பெண்ணினத்தைத் தானே பெருமைப்படுத்துகிறார்கள். பானையில் உள்ள அரிசியை எடுத்து நீங்கள் சமைக்க ஆரம்பித்த நாள் முதல், உங்கள் குடும்பம் உயர்ந்த நிலையை அடைவதையே அது குறிக்கிறது. தெய்வீகமான சமையலை குளித்துவிட்டு ஆசாரமாகச் செய்வது நல்லது.