சில விஷயங்கள் பெண்கள் செய்யக்கூடாது என்பதற்குக் காரணம் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். தாய்மை எனப்படும் கருணையுள்ளம் பெண்களுக்கே உரித்தானது. பூசணிக்காய், தேங்காய், பரங்கிக்காய் போன்றவை வாஸ்து புருஷன், பைரவர், காளி போன்ற தெய்வங்களுக்கு பலியிடுவதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. உயிர் பலிக்கு ஈடானதாக இவை செய்யப்படுகின்றன. இதுபோன்ற செயல்களை பெண்கள் செய்வதால் மனதில் ஒருவித பயமும், கருச்சிதைவும் ஏற்படும் என்பதால் ஆண்களே செய்யவேண்டும் என ஆன்றோர்கள் வகுத்துள்ளனர்.