நாக்பூர்: அயோத்தி ராமர் கோவிலுக்கு அக்., மாதத்துக்குள் அஸ்திவாரம் தயார் ஆகி விடும்; 2023ம் ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என, விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பரந்தே கூறியதாவது: அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவடையும். இம்மாத இறுதி அல்லது அக்., முதல் வாரத்துக்குள் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் முடிந்து விடும். 2023ம் ஆண்டு டிசம்பரில் ராமர் சிலை கர்ப்பகிரகத்தில் நிறுவப்பட்டு, தினசரி பூஜைகள் துவக்கப்படும். பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்டில் பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பணிகளை துவக்கி வைத்தார்.