பல்லடம்: பல்லடம் அருகே சித்தம்பலம் நவகிரக கோட்டையில், சோமவார அமாவாசை வழிபாடு நேற்று நடந்தது. அமாவாசையை முன்னிட்டு, கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று மகா ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தை துவக்கி வைத்தார். ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்களால் பக்தர்கள், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். பால், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக, சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனைக்குப் பின், பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.