பதிவு செய்த நாள்
07
செப்
2021
09:09
திண்டுக்கல் : உலக நன்மை வேண்டி திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 108 பச்சை உயிர் மூலிகைகளை கொண்டு மஹா ப்ரத்தியங்கிரா யாகம் நடந்தது.
திண்டுக்கல் மலை அடிவாரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஆவணி மாத அமாவசையை முன்னிட்டு, நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க யாகம் நடந்தது. துளசி, பிரண்டை, கற்றாழை, ஆடுதொடா, ஓமவள்ளி, கண்டங்கத்தரி, முள்முருங்கை, அரச வேர், மா இலை, வேம்பு, பூலப்பூ உள்ளிட்ட 108 மூலிகைகள், 9 வகை பழங்கள், பூக்கள், நவ தானியம், மிளகாய் வத்தல், வஸ்திரம் மற்றும் நாணயங்கள் கொண்டு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.