சாத்தூர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2012 10:06
சாத்தூர் : சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் ஆனி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 9.30 மணிக்கு ரெங்கநாத பட்டரால் கொடி ஏற்ற தீபதராதனை நடந்தது. தக்கார் சே.பூவலிங்கம்,நிர்வாக அதிகாரி கி.சுவர்ணாம்பாள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா வருதல் நடக்கிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஜூலை மூன்றாம் தேதி நடக்கிறது. ஆறாம் நாள் படந்தால், ஏழாம் நாள் சடையம்பட்டி கிராமத்தில் சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.12ம் நாள் உற்சவ சாந்திவிழா நடைபெறுகிறது.