* பிறரை ஏமாற்றினால் தெய்வத்தின் அருள் கிடைக்காது. * தர்மத்தின் மூலம் பெறும் வெற்றியே நிலைக்கும். * செய்வதை துணிந்து செய். * கடவுள் நினைத்தால் தான் எதுவும் நடக்கும். * உயிர்களிடம் இரக்கம் காட்டு. அதுவே சிறந்த தர்மம். * பெற்றோர் கொடுத்த செல்வத்தில் வாழாமல் சொந்தக் காலில் நில்லு. * மனதை கட்டுப்படுத்து. அதுவே வெற்றிக்கான வழி. * புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே. * கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். * பெண்களின் உதவி இல்லாமல் வளர்ச்சி இருக்காது. * கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே. * எதையும் தாங்கும் சக்தி அன்பிற்கு உண்டு. * துன்பம் ஏற்படும்போது அதை தாங்கிக்கொள். * நல்ல காலம் இருந்தால்தான் உனது முயற்சி வெற்றி பெறும். * நீயே உன்னை திருத்திக்கொள். * எந்த முயற்சிக்கும் பலன் உண்டு. * கடமையை உடனே செய். * உன் மேல் நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம். * குழந்தைக்கு கல்வியுடன் விளையாட்டையும் கற்றுக்கொடு.