* விடாமுயற்சி செய். வெற்றி பெறுவாய். * மனஅமைதி வேண்டுமா... பிறரது குறையை பார்க்காதே. * பிரார்த்தனை செய்து கொண்டே இரு. உனது விருப்பம் நிறைவேறும். * கடவுளை நினை. சுகமாக இருப்பாய். * பொறுமைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. * பேச்சால் யாரையும் காயப்படுத்தாதே. * உண்மையான அன்பின்றி கடவுளை உணர முடியாது. * சாதனை செய்ய ஏற்ற காலம் இளைமைப்பருவமே. * பக்தியின் மூலம் எதையும் வெல்லலாம். * கவலைப்படாதே... உனது பிரச்னை தீரும். * நீ ஒரு பொருளை மதித்தால் அந்த பொருளும் உன்னை மதிக்கும். * அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியில் ஈடுபடு. * பணம்தான் பிரச்னைக்கு காரணம். * மனதை நல்ல விஷயங்களில் ஈடுபடுத்து. * கடவுளை நேசி. துன்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை. * உடல், மனம் சோம்பலால் கெடுகிறது. * செய்த தவறை எண்ணி வருந்தாதே. அதை திருத்திக்கொள். * கடவுளின் திருவடியில் சரணடைந்தவன் பயப்பட தேவையில்லை.