குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி இந்திரா காலனியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று காலை, கிராம பொது மக்கள் மருதூர் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர். இன்று மதியம் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். நாளை காலை கிடா வெட்டுதல், இரவு மாவிளக்கு எடுத்தல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.