அஷ்ட கைலாயங்களில் ஒன்றான பழவூர் தழுவக்குழைந்தீசர் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14செப் 2021 05:09
நெல்லையில் இருந்து கல்லூர் செல்லும் வழித்தடத்தில்உள்ள பழமையான ஊர் பழவூர். பழமையைபறை சாற்றிக் கொண்டிருக்கும் இவ்வூர் இரு பகுதிகளாக உள்ளன. ஊருக்குள் நுழையும் பகுதி பழவூர் எனவும் தாமிரபரணி ஆற்றங்கரையில்உள்ள பகுதி கிராமங்கலம் என்றும் விளங்குகின்றன. இவை சோழர்காலத்தில் பழையார் என விளங்கி உள்ளது.இங்கு சாஸ்தா கோயில், பெருமாள் கோயில்அருகருகேஉள்ளன.சற்று தூரத்தில்வயல்களின் நடுவே தழுவக்குழைந்தீசர் கோயிலும் உள்ளது. இக்கோயில் சோழர்கள்காலத்தில் எழுப்பப்பட்டு பின் சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில்விரிவாக்கம் செய்யப்பட்டது அவனே இப்பகுதியில்அக்ரஹாரம் உண்டாக்கி ஏராளமான நிலங்களைதானம் செய்துள்ளான்.
ஒரு சமயம் துர்வாசமுனிவர் கரிசூழ்ந்த மங்கலம் வந்து அங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் அந்த ஊருக்கு தென்காளஹஸ்தி எனவும் இறைவனுக்கு காளஹஸ்தீஸ்வரர் என்ற திருநாமமும் ஏற்பட்டது. துர்வாசர் அத்தலத்தில் வழிபட்டபின் கரிசூழ்ந்தமங்கலத்தை சுற்றி உள்ள 8 திசைகளிலும் 8 சிவ தலங்களில்வழிபாடு செய்தார். அவை அஷ்டகைலாய தலங்கள்என திருநெல்வேலி தலவரலாறு கூறுகிறது. அதன்படி இக்கோயில்கரிசூழ்ந்தமங்கலத்தின் வட திசைக் கோயிலாகவும் முனிவர் வழிபட்ட கோயிலாக விளங்குவதும் சிறப்பாகும். அவர் வழிபட்ட போது சிவபெருமான் பச்சைசிவப்பு கலந்தவர்ணத்தில் காட்சி தந்தார். எனவேஇங்குள்ள சிவலிங்கமும் பச்சையும் சிவப்பும் கலந்தசிலாரூபமாக காட்சி தருவது ஆச்சரியத்தைத்தருவதாகும்.
மெஞ்ஞானத்தில் விஞ்ஞானம்... அணுவுக்கும் அணுவாக இருக்கும் எலக்ட்ரானைஆராய்ந்து பார்த்தால்அதில் பச்சைநிறமான வட்டத்தின் நடுவேஒரு செந்நிறம் அசைந்து கொண்டே இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. அதேபோல் இங்குள்ள சிவலிங்கம் இருநிறகலவையாக காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும். இங்குள்ள இறைவனுக்கு தழுவக்கொழுந்தீசர், தழுவக்குழைந்தீசர், தழுவக்குழைந்தநாயனார், தழுவக்குழைந்தநாயனாராகிய பிரம்மதேவீஸ்வரமுடையார் போன்ற திருநாமங்கள் உண்டு. அன்னைக்கு பெருந்தேவி, சமயவல்லி, பிரம்மதேவி போன்ற திருநாமங்களும் உண்டு.
புராண வரலாறு... ஒருசமயம் அன்னைஉமையம்மைபக்தி மிகுதிகாரணமாக தாமிரபரணி ஆற்றில் மணலால் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டைசெய்து வழிபட்டு வந்தாள். அப்போது ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதைக் கண்டு அஞ்சிய அன்னை மணலால் செய்த லிங்கம் வெள்ளத்தில் அடித்துச்சென்றுவிடக்கூடாது. பூஜைகள் தடைபடக் கூடாது என்ற எண்ணத்தில் அந்தலிங்கத்தை தழுவி அணைத்துக் கொண்டாள். பக்திக்கு அகம் மகிழ்ந்த ஈசன் தன் உடலை குழைந்து கொடுத்தான். எனவே இங்குள்ள இறைவனுக்கு தழுவக்குழைந்தீசர் என்ற திருநாமம் உ ண்டான து . அதேபோல மணல்லிங்கம் சிதைந்து விடாமல் இருக்கதக்க சமயத்தில்அன்னை பாதுகாத்ததால் அன்னைக்கு சமயவல்லி என்றதிருநாமம் உண்டானது.என ஸ்தலபுராணம் கூறுகிறது. இத்தலம் அஷ்டகைலாயத்தில் ஒன்று என்பதை திருநெல்வேலி ஸ்தலபுராணம் கூறுகிறது.
தனிப்பட்ட நபரின்முயற்சியால் இக்கோயிலில் நித்யபூஜைகள், பிரதோஷம், திருக்கல்யாணம் போன்றவை நடந்து வருகின்றன. நிலங்கள் சொத்துகளாக உள்ளன. பழவூரில்இறங்கி ஆட்டோவில் கோயிலுக்கு செல்லலாம். நடைதிறந்திருக்கும் நேரத்தை 8220017803 என்ற அலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம். -ஸ்ரீவில்லிபுத்தூரான்.