பதிவு செய்த நாள்
20
செப்
2021
11:09
திருவாலங்காடு : கனகம்மாசத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள, திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கடந்த 20 ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் இருந்த திரவுபதி அம்மன் கோவிலை சீரமைத்து, மேட்டுப்பாளையம் கிராம மக்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். காலை, 6 மணிக்கு மங்கள இசை முழங்க நான்காம் கால யாக பூஜை மற்றும் தீபாராதனையுடன் கொடியேற்றம் நடந்தது.பின்னர் காலை, 7.30 மணிக்கு நுாதன விமான மேல் பாலாபிஷேகம் செய்யப்பட்டு திரவுபதி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பகல், 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, இரவு, 9 மணிக்கு அர்ஜுனன் - திரவுபதி அம்மன் விஷேஷ புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் வந்தது. இரவு வாணவேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது. இதில் மேட்டுப்பாளையம், ராமஞ்சேரி, தோமூர், கனகம்மாசத்திரம், கூளூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.