திருவள்ளூர்: செல்லியம்மன் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.திருவள்ளூர் அடுத்த, பழைய திருப்பாசூர் மகாசக்தி செல்லியம்மன் கோவில் ஆண்டு விழாவில் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு கணபதி பூஜையுடன் பிரத்தியங்கரா ஹோமம், உச்சி கால பூஜை நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், அலங்கார பூஜை, பால்குடம், உச்சிகால பூஜை நடந்தது. மாலை, விளக்குப் பூஜையுடன் விழா நிறைவடைந்தது.