திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10.30 மணிக்கு, நடராஜர் பெருமானுக்கும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது.சிறப்பு அபிஷேக ஆராதனைக்குப் பின்னர், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பெருமானும், சிவகாமசுந்தரியும் கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை ராதா குருக்கள், கணேச குருக்கள் செய்தனர்.