இன்றைய காலத்தில் டென்ஷன் இல்லாத வாழ்க்கை என்பது கனவாக இருக்கிறது. சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்னு ஆசை மட்டுமே உள்ளது. ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும். அப்போதுதான் நம்மால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும். உங்களுக்கு பிறர் கெடுதல் செய்யும் போது, அவரை மன்னித்து விடுங்கள். அப்போதுதான் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியும். அதேபோல் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு பிறரிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்படி கேட்கும் போது அவர்கள் நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி போன்ற சொற்களை தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புமிக்கவராக காட்டும். ‘மறப்போம் மன்னிப்போம்’ என்பதை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள்.