* ஆடம்பர வாழ்வு வேண்டாமே. * பசித்தவருக்கு உணவு கொடுங்கள். * பேசுவது வெள்ளி. மவுனம் காப்பது தங்கம். * கொடுக்கல், வாங்கலில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். * பணவசதி இருந்தும் திருமணம் செய்யாமல் இருக்காதீர்கள். * கஞ்சனாக இருப்பவன் சொர்க்கம் நுழைய மாட்டான். * பொய் பேசுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை. * பணத்திற்காக திருமணம் செய்யாதீர்கள். * பெரியோர்களுக்கு மதிப்பு கொடுங்கள். * வரவுக்குத் தக்கபடி செலவு செய்யுங்கள். * முயற்சி செய்தால் எதுவும் கிடைக்கும். * அடக்கமுடன் இருங்கள். அதுவே நல்ல குணம். * நல்ல செயல்களை செய்வதில் தயக்கம் காட்டாதீர்கள். * தேவைகளை குறைத்தால் நிம்மதியாக வாழலாம். * பெற்றோரை சந்தோஷப்படுத்துங்கள். சொர்க்கத்தை அடையலாம். * யார்மீதும் பொறாமை கொள்ளாதீர்கள். * எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள். – பொன்மொழிகள்