நாய் ஒன்று தனது குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது. அது குட்டிகளை பார்த்து, ‘இந்தக் கிணற்றை தவிர மற்ற இடத்தில் விளையாடுங்கள்’ என அறிவுரை சொன்னது. சேட்டைக்கார குட்டி ஒன்று கிணற்றில் ஏறி நின்று எட்டிப்பார்த்தது. அப்போது அதன் உருவத்தை கிணற்று நீரில் பார்த்து, வேறொரு நாய் தன்னை பார்த்து கேலி செய்வதாக நினைத்தது. உடனே கிணற்றில் குதித்தது. இதை பார்த்த ஒருவர் குட்டியை காப்பாற்றினார். தாய் சொல்லை கேட்கவில்லையே என வருத்தப்பட்டது குட்டி.