செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2012 11:06
திருநெல்வேலி:செப்பறை அழகியகூத்தர் (தாமிரசபை) கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.பஞ்ச சபைகளில் ஒன்றான செப்பறை (தாமிரசபை) அழகியகூத்தர் கோயிலில் ஆனி உத்திர திருமஞ்சன திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது.ஆனித் தேரோட்ட திருவிழாவான நேற்று முன்தினம் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு அழகிய கூத்தர் பெருமான் ÷ரோட்டம் நடந்தது.