பதிவு செய்த நாள்
27
ஜூன்
2012 
11:06
 
 திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு இன்று சிவாலயா நாட்டியப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி, சீர்காழி சிவசிதம்பரம் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.நெல்லையப்பர் கோயில் 508வது ஆனித்தேர் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் திருவீதியுலா நடந்தது. இரவு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா நடந்தது. கட்டளையை தமிழ்நாடு நுகர்பொருள் வானிபக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நடத்தினர்.மாலையில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் சிவானந்தம் பக்தி சொற்பொழிவு, கோவை ஜெயராமன் பக்தி பஜனைப்பாடல்கள், இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்க காரணம் படைப்பாளியா, படிப்பாளியா என்ற தலைப்பில் ஞானசம்பந்தத்தின் சுழலும் சொல்லரங்கம் நடந்தது. நிகழ்ச்சியை சிட்டி யூனியன் பாங்க், நரியூத்து ஸ்ரீ கணபதிமைன்ஸ், அபிஷேகப்பட்டி நேச்சுரல் காட்டன் மில்ஸ், நெல்லை சியாமளா புத்தக நிலையம், அனில் ஸ்டோர்ஸ் நிறுவனத்தினர் வழங்கினர்.4ம் நாள் திருவிழாஇன்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா நடக்கிறது. இரவு வெள்ளி ரிஷிப வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது.மாலை 4 மணிக்கு நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் "திருவாசகம் எனும் தேன் என்ற தலைப்பில் காரைக்கால் விஜயலெட்சுமயின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.தொடர்ந்து நெல்லை சிவாலயா நாட்டியப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் உபயமாக வழங்குகின்றனர். ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாகம், நெல்லை கல்சுரல் அகடமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.