திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் 33வது ஆண்டு பால்குட வழிபாட்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு சிவன்கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தினர். நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் டவுன் பஞ்.,தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் பால்குட நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாலையில் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கியும், வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை பொதுதிரிசுதந்திரர்கள் சபையினர் செய்திருந்தனர்.