தேவகோட்டை: தேவகோட்டை ராமாயண ராமர் கோயிலில் புரட்டாசி மாதத்தினை முன்னிட்டு எட்டு நாட்கள் தொடர் சொற்பொழிவு நடந்தது. 28 ஆம் ஆண்டாக ராமர் சன்னதியில் அருசோமசுந்தரன் ராமாயண கதை சொற்பொழிவாற்றினார். முன்னதாக ஜமீன்தார் சோமநாராயணன் தலைமையில் ஸ்தபதி சண்முகநாதன் துவக்கி வைத்தார். சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ரவிச்சந்திரன் , சிதம்பரம், மெய்யப்பன், வள்ளிக்கண்ணு , சபாபதி, குகன் பழனியப்பன் வாழ்த்தி பேசினர். அலமேலு நன்றி கூறினார்.