பதிவு செய்த நாள்
27
செப்
2021
04:09
கிருஷ்ணகிரி: கணவாய்ப்பட்டி வெங்கட்டரமண சுவாமி கோவிலில் அரசு உத்தரவை மீறி, பணம் பெற்றுக்கொண்டு பக்தர்களை கோவிலுக்குள் அதிகாரிகள் அனுமதித்தனர்.
கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்ப்பட்டியில், வெங்கட்டரமண சுவாமி கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா பரவலை தடுக்க, வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில் கோவில்களை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், நேற்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சுவாமியை வழிபட்டும், மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியும் சென்றனர். ஆனால், கோவில் அதிகாரிகள், புரோக்கர்களுடன் கைகோர்த்து பணம் பெற்றுக்கொண்டு, சிலரை கோவில் வடக்கு வாசல் கேட் வழியாக உள்ளே அனுமதித்தனர். இதை அங்கிருந்த போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.