மவுனகுரு சுவாமி கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்த விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2021 04:09
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கான முகூர்த்த விழா நடந்தது. கசவனம்பட்டி மௌன குரு சுவாமி கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள், கடந்தாண்டு துவங்கியது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால், கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. கடந்த பிப். 15ல், கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் பாலாலய விழா நடந்தது. வரும் அக். 27ல், கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான யாகசாலை முகூர்த்த விழா, நேற்று நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. மகா தீபாராதனையுடன் முகூர்த்தக்கால் ஊன்றுதல் நடந்தது. மவுனகுரு சுவாமி கோயில் டிரஸ்ட் சார்பில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.