பதிவு செய்த நாள்
30
செப்
2021
03:09
மேட்டுப்பாளையம்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில், கால பைரவர் சன்னதி உள்ளது. புரட்டாசி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மஞ்சள், திருமஞ்சள், அரிசி மாவு, சந்தனம், தேன், பால், தயிர், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் கால பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏலக்காய் மாலை அணிவித்த நிலையில், ராஜ அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில், பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. தலைமைப் பூசாரி துரைசாமி அதே பூசாரிகள் ரஞ்சித்குமார் மனோஜ் குமார் ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர்.