பதிவு செய்த நாள்
30
செப்
2021
03:09
தஞ்சாவூர், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்க வலியுறுத்தி, சுவாமிமலை முருகன் கோவில் முன்பாக, முருக பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவில் முன்பாக, முருகப் பக்தர்கள் குழுவை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் தலைமையில் நேற்று, கொரோனா பரவல் காரணமாக, தமிழக அரசு கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலை சார்ந்துள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்வோர், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், தியேட்டார்கள், பூங்காக்கள், டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் திறக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா பரவை காரணம் காட்டி வாரத்தில் மூன்று நாட்கள் பொதுமக்களில் கோவில்களில் வழிபடும் தடையை உடனடியாக நீக்க வேண்டும் வாரம் முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.