மகாளய அமாவாசை: அக்., 5, 6ல் ராமேஸ்வரத்தில் நீராட தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2021 10:10
ராமநாதபுரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்., 5, 6ல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடற்கரை பகுதியில் பக்தர்கள் நீராடவும், ராமநாதசுவாமி கோயிலில் வழிபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதமர்த்தனியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தகடலில் நீராடிவிட்டு, அதன்பின் தீர்த்தக்கிணறுகளில் குளித்து சுவாமி தரிசனம் செய்வர். தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தீர்த்தக்கிணறுகள் மூடப்பட்டுள்ளன. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதியில்லை. பிறநாட்களில் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. அக்.5 மாலை முதல் அக்.6 வரை மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் இரு நாட்கள் முழுவதும் அக்னி தீர்த்தக்கரை பகுதியில் நீராடவும், ராமநாதசுவாமி கோயிலில் வழிபடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.