பதிவு செய்த நாள்
28
ஜூன்
2012
10:06
பண்ணைக்காடு : பண்ணைக்காடு மும்முடி ராஜகுலத்திற்கு பாத்தியப்பட்ட வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷகம் நாளை காலை நடக்கிறது. யாகசாலை பூஜையுடன் துவங்கும் கும்பாபிஷகம் வெள்ளியன்று புண்யாக வாசனம், ப்ரதான ஹோமம், பூர்ணாஹதீ, கும்பபிரதசகினம் ஹோமங்கள் நடக்கிறது. நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிம்ம லக்கனத்தில் வெங்கடேசப்பெருமாள், பத்மாவதி தாயார், லட்சுமி, நூதன சக்கரதாழ்வார், யோக நரசிம்மர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், வீரம்மாள், காமாட்சியம்மன், லாட சன்னாசி, நாகம்மாள், விநாயகர், முருகன், நவக்கிரகங்களுக்கு சுவாமிகளுக்கு திருக்குட நன்னீராட்டு குட முழுக்கு விழா நடககிறது. இலத்தூர் வாசுதேவ கோவிந்தராஜ பட்டாட்சியர் தலைமை வகிக்கிறார். திருக்கல்யாணம், வாண வேடிக்கை தங்கரத மின் விளக்கு அலங்காரத்தில் சுவாமி நகர்வலம் வருதல் ஆகியன நடக்கிறது. அன்னதானம், கலை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கிறது. பண்ணைக்காடு மும்முடி ராஜகுல நிர்வாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.