பதிவு செய்த நாள்
28
ஜூன்
2012
10:06
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவின் 5வது நாளான இன்று கிருஷ்ணவாணி நிருத்யாலயா நடனப்பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும், மகதி குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.நெல்லையப்பர் கோயில் 508வது ஆனித்தேர் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா நடந்தது. இரவு வெள்ளி ரிஷிப வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது.மாலையில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் "திருவாசகம் எனும் தேன் என்ற தலைப்பில் காரைக்கால் விஜயலெட்சுமயின் பக்தி சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து நெல்லை சிவாலயா நாட்டியப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது.
நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் உபயமாக வழங்கினர்.5வது நாள் நிகழ்ச்சிதிருவிழாவில் இன்று காலை வெள்ளி ரிஷிப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி, அம்பாள் திருவீதியுலாவும் நடக்கிறது. வீதியுலா ஏற்பாடுகளை தச்சை என்.ராஜா குடும்பத்தினர் செய்துள்ளனர். நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் மாலை 4 மணிக்கு கந்தகுமார் பக்தி சொற்பொழிவும், நெல்லை கிருஷ்ணவாணி நிருத்யாலயா நடனப்பள்ளி ஆசிரியை வத்சலா வழிகாட்டுதலில் நாட்டிய மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு மகதி குழுவினரின் பக்தி இன்னிசையும் நடக்கிறது. நிகழ்ச்சியை நெல்லை ஓட்டல் சரவணபவா நிர்வாகத்தினர் வழங்குகின்றனர். ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாகம், நெல்லை கல்சுரல் அகடமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர். நெல்லையப்பர் கோயிலில் இன்று5ம் நாள் ஆனித்தேர் திருவிழாவெள்ளி ரிஷிப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, காலை 8.30 மணிஇந்திர விமானத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, இரவு 8 மணிபக்தி சொற்பொழிவு, சொற்பொழிவாளர்: கந்தகுமார், மாலை 4 மணி நெல்லை கிருஷ்ணவாணி நிருத்யாலயா நடனப்பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி, மாலை 5 மணிமகதி குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி, இரவு 7.30 மணி.