பதிவு செய்த நாள்
28
ஜூன்
2012
10:06
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி கோயில்களில் வருஷாபிஷேக விழா நடந்தது. ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் அருகேயுள்ள வரம்தரும் விநாயகர் கோயிலில் நடந்த 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா காலை மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. பச்சியாபிள்ளை, செல்லப்பாண்டியன், கணபதியாபிள்ளை, சங்கர் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் ஹோம சம்பூர்ணம், அபிஷேக தீபாராதனையை அப்புநாதபட்டர், ஆண்டபெருமாள் நடத்தினர்.பின்னர் விமான அபிஷேகம் நடந்தது. விநாயகர், முருகர், நவக்கிரகங்கள், பாலதுர்க்கை, நாகர் உட்பட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகத்தை அப்புநாதபட்டர் நடத்தினார். இரவு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை வரம்தரும் விநாயகர் கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர். ஆழ்வார்குறிச்சி வேங்கடேசபெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் கும்ப ஜெபம், சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷ அபிஷேகங்களை ரங்கநாத ஐயங்கார், சம்பத்குமார், நம்பிராஜன், வி.கே.புரம் ரங்கநாதன் நடத்தினர். பின்னர் மதியம் விஷேச அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மாலை சகஸ்ரநாம வழிபாடும், பெண்கள் சிறப்பு பாடல்களும் பாடினர். இரவு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளலும், பின்னர் சிறப்பு பூஜையும் நடந்தது.