புதுச்சேரி : முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் மாதந் தோறும் அமாவாசை தினத்தில் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வருவர்.நேற்று அமாவாசையை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்ட ஏந்தி கோவிலை வலம் வந்து மகா தீபம் ஏற்றினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.