பதிவு செய்த நாள்
06
அக்
2021
04:10
பெங்களூரு : உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை, பாரம்பரியம் குறையாமல் நாட்டின் மூத்த அரசியல் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி நாளை துவக்கி வைக்கிறார்.
விழாவில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மைசூரு முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, கொரோனாவால் கடந்தாண்டு எளிமையுடன் கொண்டாடப்பட்டது. இந்தாண்டும் பாரம்பரியம் குறையாமல் கொண்டாட, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான தசரா விழா, சாமுண்டி மலையில் நாளை காலை 8:15 மணியிலிருந்து, 8:45 மணிக்குள் சுப முகூர்த்தத்தில், மூத்த அரசியல் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி துவக்கி வைக்கவுள்ளார்.அதன் பின், மாலை 6:00 மணிக்கு, அரண்மனை வளாகத்தில், கலாசார நிகழ்ச்சிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைக்கிறார். இதே வேளையில், மாநில அரசின் சங்கீத வித்வான் விருது வழங்கப்படஉள்ளது. தனியார் தர்பார்விழாவுக்கு வரும்படி, உடையார் மன்னர் வம்சத்தின் பிரமோதா தேவிக்கு அரசு சார்பில் நேற்று முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று முதல், வரும் 14 வரை, மன்னர் வம்சத்தின் யதுவீர், தங்க சிம்மாசனத்தின் மீது அமர்ந்து பாரம்பரிய முறைப்படி தனியார் தர்பார் நடத்துவார்.
ஆயுத பூஜை அன்று, பட்டத்து யானைகள், குதிரைகள், பசுக்கள், கார்கள், ஆயுதங்களுக்கு பூஜை செய்வார். விஜயதசமி அன்று வெள்ளி பல்லக்கில் வந்து வன்னி மரத்துக்கு பூஜை செய்வார். அன்றைய தினம் மதியம், அரண்மனை வளாகத்தில், தங்க அம்பாரியினுள் சாமுண்டீஸ்வரி வைக்கப்பட்டு, ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும்.விழாவை ஒட்டி, நகர் முழுதும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 24ல், சாமுண்டி மலை அடி வாரத்தில் எம்.பி.ஏ., மாணவி ஒருவரை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.பலத்த பாதுகாப்புதசரா விழாவின் போது நாடு முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் மைசூருக்கு வருவர். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மொத்த நகரமும் இம்முறை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.அசம்பாவிதம் நடக்காதவாறு, 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படி சுற்றி திரிபவர்களை கண்டறிந்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையம், சாமுண்டி மலை, அரண்மனை, மிருக காட்சி சாலை, பிருந்தாவன் கார்டன் உட்பட சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனாவால், மாநில தலைமை செயலர் ரவிகுமார் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.மீறக்கூடாதுஅவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனாவால், இந்தாண்டு தசரா விழா எளிமையாகவும், பக்தியுடனும் கொண்டாடப்பட வேண்டும்.
மைசூரு தவிர மாநிலத்தின் பிற பகுதிகளில் நடக்கும் தசரா விழாக்களில், பார்வையாளர்களின் எண்ணிக்கை, 400 பேருக்கு மிகக் கூடாது. சமூக விலகல் கடைப்பிடிக்க முடியாத நிகழ்ச்சிகள் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். விழா நாட்களில், சமூக அமைதி சீர்குலையும் வகையில் எந்த நிகழ்ச்சியும் நடக்காமல் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் தடுப்பூசி கட்டாயம். அரண்மனை வளாகத்தில் நடக்கும் கலாசார நிகழ்ச்சிகளில் சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும். நுழைவு பகுதிகளில் கிருமி நாசினி மருந்து வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் பார்வைக்காக சமூக வலைதளங்கள் மூலம் அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. சாமுண்டி மலையில் நாளை நடக்கும் துவக்க விழாவில், 1-00 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரண்மனை வளாகத்தில், நாளை முதல், 15 வரை நடக்கும் நிகழ்ச்சிகளில், அதிகபட்சமாக, 500 பேர் பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் போலீசார், அதிகாரிகள், ஊழியர்கள், ஊடகவிய லாளர்கள், கொரோனா நெகடிவ் சான்றிதழ், ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம். முக கவசம் அணியாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.